[Advaita-l] Shraddhaa in nitya karma
V Subrahmanian
v.subrahmanian at gmail.com
Sun Jan 7 13:29:34 EST 2018
Sri Sarma Sastrigal of Chennai recalling incidents of extraordinary
interest in performing sandhyavandanam, etc. Even a blind person was no
exception.
2014 ம் ஆண்டு நடந்த ஒரு சம்பவம் நினைவுக்கு வருகின்றது.
சென்னை சைதாப்பேட்டை ஸ்ரீநகர் காலனியில் எனது உபாத்யாயத்தில் ஒரு சதாபிஷேக
வைபவம். ஸ்ரீ ருத்ர ஏகாதசனியும் சிறப்பாக நடைபெற்றது. பிள்ளைகள்,
மாட்டுபெண்கள், பேரன் பேத்திகள், சம்பந்திகள் மற்ற உறவினர்கள் என பந்து
மித்ரர்கள் நிறையபேர் வந்திருந்தனர்.
மஹந்யாஸம் முடிந்ததும், 11 தடவை ஸ்ரீருத்ர ஜபம் துவங்குவதற்கு முன்பு சிறிது
விராமம் (break). அப்போது நேரம் கிட்டத்தட்ட காலை 9 30 இருக்கும். 80 வயதை
கடந்த அந்த சதாபிஷேக பெரியவர் நேராக என்னிடம் வந்தார். இதோ அவர் சொன்னதை
நீங்களும் கேளுங்களேன்:
“...மாமா, ப்ரேக் முடிந்ததும் ருத்ர பாராயணம், ஹோமம், தொடர்ந்து எனக்கும் என்
மனைவிக்கும் அபிஷேகம் என எல்லாம் முடிய கிட்டட்ட 1 மணி ஆகுமா?"
ஆம், ஆகலாம்.
”....அப்போ நான் போய் மாத்யாஹ்னிகம் இப்பவே செஞ்சுட்டு வந்துட்டமா ? ஏனென்றால்
அதற்கு பிறகு ப்ராஹ்மண போஜனம் ஆசிர்வாதம் என பல விஷயங்கள் தொடர்ந்து
இருக்கு. எல்லாம் முடிய மணி 2 ,3 ஆகிவிடும். எனக்கு மாத்யாஹ்னிகம்
விட்டுபோய்விடலாம் அல்லவா...?”
இதுதான் ஆச்சார அனுஷ்டானத்தில் பிடிப்பு என்பது. மனோபாவமும், ச்ரத்தையும்
இருந்தால் போதுமானது. எல்லாம் நடந்து விடும்.
மற்றொரு சம்பவம்.
சென்னையில் ஒரு முகாம். யாரெல்லாம் சந்த்யாவந்தனம் செய்து வருகின்றார்களோ
அப்பேர்பட்டவர்களில் யாருக்காவது தங்களது சந்தயாவந்தன மந்திரங்களில்
ஸ்வரத்தையோ அல்லது அக்ஷரங்களையோ ‘கரெக்ட்’ செய்துக்கொள்ளவேண்டும் என
விருப்பப்படுவர்களுக்காக மட்டும் இந்த முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
நாட்டின் பல பகுதிகளிலிருந்து நூற்றுக்கணக்கில் அன்பர்கள் கலந்துக்கொண்டனர்.
யஜுர், ரிக், சாம வேத சாகைகள் சார்ந்தவர்கள் வந்திருந்தனர். வைஷ்ணவர்கள்,
ஸ்மார்த்தர்கள், என எல்லா தரப்பினரும் கலந்துக்கொண்டனர். எல்லா வயதினரும்
வந்திருந்தனர், 8 முதல் 80 வரை,
70, 80 வயதை அடைந்தவர்களும் எந்தவிதமான கூச்சமும் , தயக்கமும் இல்லாமல்
கலந்துக்கொண்டது இன்றைய இளைய சமுதாயத்திற்கு ஒரு எடுத்துக்காட்டாக அமைந்தது
என்றால் மிகையாகாது.
அதில் ஒருவர் காரைக்கால் ஊரிலிருந்து வந்திருந்தார். வாலிபர். நேத்ர பாவம்
இல்லாதவர். ஆம், இரண்டு கண்களிலும் பார்வை கிடையாது. இருப்பினும் முகாமில்
ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வேத வகுப்புகளிலும் எல்லாவற்றிலும் மற்றவர்களைபோல
மிக ச்ரத்தையாகவும் ஈடுபாடுடன் கலந்துக்கொண்ட இவருக்கு நேத்ரபாவம் இல்லை
என்பதை மதிய நேரத்தில் ஓய்வு சமயத்தில் அறிந்ததும் வந்தவர்கள்
அதிர்ச்சியிலிருந்து மீள நொம்ப நேரம் வேண்டியிருந்தது.
சரி, ” எனக்கு ஆசைதான் சந்த்யாவந்தனம் செய்வதற்கு, ஆனால் மந்த்ரங்களும்
பிரயோகமும் தெரியாது எனக்கு வயதாகி விட்டதே நான் எப்படி இந்த வயதில்
சந்த்யாவந்தனம் கற்றுக்கொள்ள முடியும்? ” என்று யாராவது நினைத்தால் அதற்கு
வழி இருக்கின்றது.
உங்காத்து வாத்யாரை உடனே தொடர்புக்கொண்டு ‘எனக்கு சந்த்யாவந்தனம் கற்றுத்
தாருங்கள்’ என கேட்கலாமே. இதை கேட்பதற்கு கூச்சமோ வெட்கமோ படக்கூடாது, அதற்கு
பதிலாக ’எனக்கு விதித்துள்ள ஒரு சம்ஸ்காரத்தை இந்த வயதிலையாவது நான்
கற்றுக்கொண்டு அனுஷ்டிக்கப்போகின்றேனே’ என்று பெருமிதம் கொள்ள வேண்டும்.
நாம் சந்தியாவந்தனம் செய்யாமல் இருப்பது மன்னிக்க முடியாத குற்றம்.
சர்மா சாஸ்திரிகள்
More information about the Advaita-l mailing list