[Advaita-l] Joyous 59th Vardanthi of H.H. Bharathi Theertha Mahaswamigal

Sriram Krishnamurthy asksriramjobs at gmail.com
Fri Apr 3 03:54:12 CDT 2009


Hi Mr. Mahadevan Babu,

Very glad to read the Swamigal inspired work. I introduce myself as
grandson(daughter's son) of Sri Ramasubramania Iyer of Tirunelveli.(Ex
Dharmadhikari of Tirunelveli Sringeri Mutt)

Warm regards,
Sriram Krishnamurthy

2009/4/2 Mahadevan Babu <babunim at optushome.com.au>

> Dear Asthikas,
> Sri Gurubyo Namaha !!!
> I pray to the Lotus Feet of Jagadguru Sri Sri Sri Bharahti Theertha
> Mahaswamigal to grace us all with the path to Shreyas.
> 1st April 2009 (Indian Time) / 2nd April 2009 (US Time) marks the 59th
> Vardanthi (Birthday) of the Mahaswamigal.
> On this joyous day, I wish to share with you the Akshara Mala that I was
> able to submit on to his Lotus Feet in Tamil by the Grace of Acharyal and
> Sharadambal.
> Please excuse me that I have not yet translated & transliterated in
> English.
>
> அக்ஷரங்களில் அகாரமாய் விளங்கிட்டு
> அகிலலோகத்தின் சாக்ஷியாய் திகழ்ந்திட்டு
> அபிநவ வித்யாதீர்த்தரின் நிழலாய் நின்றிட்டு
> அன்பின் ரூபமான எங்கள்குரு ஶ்ரீ பாரதீ தீர்த்தரே !
>
> ஆஸ்தீக தர்சனமாம் ஆறு அவற்றின்
> ஆற்றாய் பெருகிட்டு அருள்வார்
> ஆத்மஞானத்தை சுடர் விட்டு
> ஆதார ரூபமான எங்கள்குரு ஶ்ரீ பாரதீ தீர்த்தரே !
>
> இருமையற்ற இருப்பே உண்மை
> இலாமையுடைய தோற்றமே மாயை
> இத்தத்துவத்தை உலகுக்கு போதித்து
> இனிய ரூபமான எங்கள்குரு ஶ்ரீ பாரதீ தீர்த்தரே !
>
> ஈடற்ற வித்தையின் இருப்பிடமே
> ஈர்த்திடும் மாயையெனும் இருட்டினை
> ஈட்டியெனும் ஞானத்தால் தகர்த்திட்டு
> ஈசனின் ரூபமான எங்கள்குரு ஶ்ரீ பாரதீ தீர்த்தரே !
>
> உபநிடதச் சாரமான அத்வைத
> உண்மையை உலகுக்கு போதிக்கவே
> உருவெடுத்த வித்யாதீர்த்த சீடரே
> உலககுரு எங்கள்குரு ஶ்ரீ பாரதீ தீர்த்தரே !
>
> ஊனாயினும் ஞான மூடாயினும்
> ஊக்கமுடன் குருபக்தியுடன் பணிய
> ஊக்குவிக்குமே சாதன சதுஷ்டயம்
> ஊர்த்வ மூலமான எங்கள்குரு ஶ்ரீ பாரதீ தீர்த்தரே !
>
> எவ்விடத்திலும் பூர்ணமாய் நிறைந்து
> எக்காலத்திலும் திடமாய் நின்றிட்டு
> எவ்வுயிரிலும் கருணையாய் பரவிடும்
> எம்பெருமான் ரூபமான எங்கள்குரு ஶ்ரீ பாரதீ தீர்த்தரே !
>
> ஏகமான ப்ரும்மமே சத்தியம்
> ஏனையால் ஏற்றதாழ்வு எண்ணலாகாது
> ஏற்றிருக்கும் தெய்வரூபத்தில் என்று
> ஏனையோர்க்கு போதித்த எங்கள்குரு ஶ்ரீ பாரதீ தீர்த்தரே !
>
> ஐம்பொறிகளுக்கு எட்டாத வஸ்துவாம்
> ஐந்துறையினுள் புதைந்த பொக்கிஷமாம்
> ஐயன் குருவின் அருளாலே அறியுமந்த
> ஐயனான எங்கள்குரு ஶ்ரீ பாரதீ தீர்த்தரே !
>
> ஒலிக்கும் மறையின் தத்துவமே
> ஒளிக்கு ஒளியான ஞானரூபமே
> ஒடுங்கும் எல்லாம் சுத்தசைத்தன்யமே
> ஒப்பில்லை உமக்கு எங்கள்குரு ஶ்ரீ பாரதீ தீர்த்தரே !
>
> ஓங்கிடும் உண்மையின் உறைவிடம்
> ஓதிடும் மறைகளின் அந்தமாம்
> ஓரான தத்துவத்தின் சாரமாம்
> ஓங்கார ரூபமான எங்கள்குரு ஶ்ரீ பாரதீ தீர்த்தரே !
>
> ஒன்றிட்டு குருவடியினில் வீழ்ந்திட்டால்
> ஔஷதமது அஞ்ஞானப் பிணியினுக்கு
> ஓடமது சம்சாரக்கடலை கடப்பதற்க்கு
> ஔதார்ய மூர்த்தியான எங்கள்குரு ஶ்ரீ பாரதீ தீர்த்தரே !
>
>                                      மஹாதேவன் பாபு
> Mahadevan Babu
> babunim at optushome.com.au
>
>
> _______________________________________________
> Archives: http://lists.advaita-vedanta.org/archives/advaita-l/
> http://blog.gmane.org/gmane.culture.religion.advaita
>
> To unsubscribe or change your options:
> http://lists.advaita-vedanta.org/cgi-bin/listinfo/advaita-l
>
> For assistance, contact:
> listmaster at advaita-vedanta.org
>


More information about the Advaita-l mailing list